வெள்ளியங்கிரி மலைக்கு செல்வதை தடுக்கும் திமுக அரசு: வானதி சீனிவாசன் கண்டனம்!

வெள்ளியங்கிரி மலைக்கு செல்வதை தடுக்கும் திமுக அரசுக்கு தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு, வானதி சீனிவாசன் எழுதியுள்ள கடிதத்தில், கோவை நகரின் மேற்கு எல்லையில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஸ்தலம் வெள்ளியங்கிரி மலை. இந்த மலையைத் தென் கைலாயம் என்றும் போற்றப்படுகிறது.

இந்த மலையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் ஏழு மலைகளைத் தாண்டி சிவபெருமானைத் தரிசித்து வருவது வழக்கம்.

தற்சமயம் பிப்ரவரி மாதம் என்பதால் பல்வேறு பகுதியிலிருந்து வெள்ளியங்கிரி மலைக்குப் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

ஆனால், பக்தர்கள் மலை ஏற மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்து வருகிறது. இதனால், பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

எனவே பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று, பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்களை வெள்ளியங்கிரி மலை எற அனுமதிக்க வேண்டும்.

பக்தர்களுக்குத் தேவையான உதவிகளையும் பாதுகாப்புகளையும் வனத்துறை அளிக்க வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top