நாடாளுமன்ற கேன்டீனில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உட்பட நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிர்பாராத மதிய உணவை அளித்து பிரதமர் நரேந்திர மோடி ஆச்சரியப்படுத்தினார்.
நாடளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, இன்று (பிப்ரவரி 09) சக நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
நாடளுமன்ற கேன்டீனில் சாதாரணமாகத் தோன்றிய பிரதமர் நரேந்திர மோடி, எம்.பி.க்களை தன்னுடன் உடனடியாக மதிய உணவிற்கு வருமாறு அழைத்தார். இது அதிகார மண்டபங்களில் அரிதாகவே காணப்படும், நட்புறவு மற்றும் முறைசாரா சூழ்நிலையை உருவாக்கியது.
நாடளுமன்ற கேன்டீனில், அரிசி, பருப்பு, கிச்சடி மற்றும் தில் கா லட்டு போன்ற ஆரோக்கியமான இந்திய உணவு வகைகளும், 29 ரூபாய்க்கு வழங்கப்பட்டன. எளிமையான, சைவ உணவு வகைகளை பிரதமர் மோடி விரும்பினார் என்பதற்கு இந்த மெனு ஒரு சான்றாக இருந்தது.
மதிய உணவு என்பது வெறும் உணவைப் பற்றியது அல்ல; இது பிரதமருடன் கட்சிக்கு இடையேயான உரையாடல் மற்றும் தனிப்பட்ட தொடர்புக்கான வாய்ப்பாக இருந்தது.
இதில் தெலுங்கு தேசம் கட்சியின் ராம் மோகன் நாயுடு, பகுஜன் சமாஜ் கட்சியின் ரித்தேஷ் பாண்டே, பாஜகவின் லடாக் எம்பி ஜம்யாங் நம்க்யால், மத்திய இணை அமைச்சர் எல்.முருகுன், பிஜேடியின் சஸ்மித் பத்ரா, பாஜகவின் மகாராஷ்டிர எம்.பி., ஹீனா காவித் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் கலந்துகொண்டனர்.
“எம்.பி.க்கள் கேன்டீனில் மதிய உணவுக்காக பிரதமருடன் இது முற்றிலும் சாதாரணமான, அன்பான சந்திப்பு. இது ஒரு நல்ல சைகை” என்று எம்.பி.க்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் பிரதமருடன் அமர்ந்திருப்பது போல் உணரவில்லை,” என்று மற்றொருவர் கூறினார்.
மதிய உணவுக்குப் பின்பு பணம் செலுத்துமாறு பிரதமர் தனது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.