பாரத ரத்னா விருது.. பிரதமர் மோடிக்கு மத்திய  இணை  அமைச்சர் எல்.முருகன் நன்றி!

முன்னாள் பிரதமர் சவுதாரி சரண், வேளாண் விஞ்ஞானி எஸ்.எஸ்.சுவாமிநாதன், பி.வி.நரசிம்மராவ் சிங் உள்ளிட்டோருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்துள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் நன்றி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்;

தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் பிறந்தவர், பாரதத்தின் சிறந்த வேளாண் விஞ்ஞானி, பசுமை புரட்சியின் தந்தை மரியாதைக்குரிய எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள் மிகச் சிறந்த தாவர மரபியல் நிபுணராகவும், மனிதாபிமானியாகவும் திகழ்ந்தவர்.
நமது தேசத்தில் ‘பசுமைப் புரட்சி’ ஏற்படுத்தியதில் முக்கியமானவர்.

இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் வங்காள தேசத்தில் ஏற்பட்ட பஞ்சத்தின் போது, பாரத மக்களுக்கான உணவுத் தேவையை உறுதி செய்யும் நோக்கில் தன் வாழ்வை வேளாண் துறைக்கு அர்ப்பணித்தார்.

“சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது, ராமன் மகசேசே விருது மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உலக அறிவியல் விருது” போன்ற பல்வேறு விருதுகளுக்கும், கௌரவத்திற்கும் உரியவரான மரியாதைக்குரிய எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களுக்கு, தேசத்தின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது வழங்கி கௌரவித்துள்ள பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு தமிழக மக்களின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்..!

பி.வி.நரசிம்மராவ்:

ஆந்திர மாநில முதல்வராகவும், தேசத்தின் மத்திய உள்துறை, வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும், பாரதத்தின் 9-வது பிரதமராகவும் பதவி வகித்த ஆகச்சிறந்த ஆளுமை, மரியாதைக்குரிய பி.வி.நரசிம்மராவ் அவர்கள்.

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களால், ‘அரசியல் அமைப்பை விட தேசம் பெரியது என்று நம்பிய தேசபக்தி கொண்ட அரசியல்வாதி’ என்ற புகழுரைக்கு சொந்தமானவர். தேசம் நிகழ்த்திய அணு ஆயுத சோதனைக்கு முதல் வித்திட்டவர்.

மரியாதைக்குரிய பி.வி.நரசிம்மராவ் அவர்களுக்கு, தேசத்தின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது வழங்கி கௌரவித்துள்ள பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி..!

சவுதாரி சரண் சிங்:

பாரதத்தின் சுதந்திரத்துக்காக தன்னை சுதந்திரப் போராட்டங்களில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். உப்பு சத்தியாகிரகம் போன்ற, அந்நியர்களுக்கு எதிரான வலுவான போராட்டங்களில் ஈடுபடுத்திக் கொண்டு சிறை சென்றவர்.

தேசத்தை இயக்கிய முன்னாள் அரசியல்வாதிகளின் தவறான பொருளாதார கொள்கையின் மீதான தனது மனம் திறந்த விமர்சனத்தை முன்வைத்தவர். தேசத்தின் 3-வது துணைப் பிரதமராகவும், 5-வது பிரதமராகவும் பணியாற்றிய, மரியாதைக்குரிய திரு.சவுதாரி சரண் சிங் அவர்களுக்கு, தேசத்தின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது வழங்கி கௌரவித்துள்ள பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி..!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top