சிறைப்பறவை செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை விட்டு விலகல்

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி, தனது இலாகா இல்லாத அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 13ஆம் தேதி கைது செய்யப்பட்டு, சுமார் 6 மாதங்களுக்கு மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர் சிறையில் இருந்தாலும் மக்களின் வரிப்பணத்தில் மாதம் சம்பளம் மற்றும் அவரது உதவியாளருக்கு சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. மக்களின் வரிப்பணத்தை சிறையில் உள்ளவருக்கு வீணடித்து வந்த திமுக அரசுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று (பிப்ரவரி 12) தனது இலாகா இல்லாத அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top