சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழகத்தோடு இணைப்பதற்கு முன்னின்று போராடியவர் ஐயா தாணுலிங்க நாடார் எனத் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் வலைத்தளப் பதிவில்;
சுதந்திரப் போராட்ட வீரரும், கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழகத்தோடு இணைப்பதற்கு முன்னின்று போராடியவர்களில் ஒருவருமான ஐயா தாணுலிங்க நாடார் அவர்களின் பிறந்த தினம் இன்று.
நாடாளுன்ற உறுப்பினராகவும், இந்து முன்னணி இயக்கத்தின் முதல் மாநிலத் தலைவராகவும் அவர் மேற்கொண்ட கல்விப் பணிகளும், ஆன்மீகப் பணிகளும், சமூகப் பணிகளும் என்றும் அவரது பெருமையைக் கூறும். தமிழக பாஜக சார்பாக அவரது புகழை போற்றி வணங்குகிறோம் எனத் தெரித்துள்ளார்.