தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதி என்பது பாஜகவிற்கு ,எப்பொழுதும் மிக முக்கியமான தொகுதி ஆகும்.
1998, 1999 ஆம் ஆண்டுகளில் பாஜக, கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. அதன் பின் நடந்த பாராளுமன்ற தேர்தல்களில் பாஜக வெற்றி பெறவில்லை என்றாலும் இரண்டாவது இடத்தை பா.ஜ.க., எப்பொழுதும் தக்க வைத்துள்ளது.
கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுகவை
விட , கம்யூனிஸ்ட்களே பலம் மிக்கவையாக உள்ளன. அதற்கு காரணம் கம்யூனிஸ்ட்களுக்கு திமுக உடனான கூட்டணி ஆகும்.
பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பு ஏற்றது முதல், தமிழகம் எங்கும் பாஜகவிற்கு பெரும் ஆதரவு பெருகி வருகிறது. அதே சமயத்தில் வாரிசு அரசியல் செய்யும் கட்சி, ஊழல் மலிந்த கட்சி, குடும்ப கட்சி என திமுக மற்றும் காங்கிரஸின் பலம் குறைந்து கொண்டே வருகிறது.
நியூஸ் கிளவுட்ஸ் செய்தி நிறுவனம் ,கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதி பொதுமக்களிடையே கருத்து கணிப்பு ஒன்றை நடத்தி உள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதி முழுக்க ஏழை, நடுத்தரம், பணக்காரர்கள் எனவும், பெண்கள், ஆண்கள், இளைஞர்கள், வயதானவர்கள் எனவும், பல்வேறு சாதியினரிடேயும் மொத்தமாக சேர்த்து 1596 சாம்பிள்ஸ் எடுக்கப்பட்டுள்ளது.
இதில் அதிமுக கூட்டணி மற்றும் திமுக கூட்டணியை பின்னுக்கு தள்ளி பாஜக 663 வாக்குகளுடன் முதல் இடம் பெற்றுள்ளது. திமுக கூட்டணி 593, அதிமுக கூட்டணி 194, நாம் தமிழர் கட்சி 89 வாக்குகளை பெற்றுள்ளது. மற்றவை என 57 பேர் வாக்களித்துள்ளனர்.
இந்த கருத்துகணிப்பின் முடிவு பாஜகவினர் மத்தியில் மிகப்பெரிய உற்சாகத்தை தந்துள்ளது.
பாஜகவின் இந்த அபார வளர்ச்சிக்கு, பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.
பாஜக தலைவர் அண்ணாமலையின் போராட்டம் குணம், நேர்மை பண்பு, அவரின் தலைமையில் பாஜக என்று காரணங்கள் ஒரு பக்கம் உள்ளது.
அதே நேரத்தில் திமுக சார்பாக கோயம்புத்தூர் பொறுப்பு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மற்றும் திமுகவினரின் ஊழல், கரைபடிந்த கைகள், அடாவடிதனம், ரவுடியிசம், கட்டபஞ்சாயத்து, வசூல் வேட்டை ஆகியவையும் உள்ளது.
மேலும் கோயம்புத்தூர் மக்கள் பாதிக்கும் மேற்பட்டோருக்கு, செந்தில் பாலாஜியை தெரியும் அளவுக்கு கம்யூனிஸ்ட் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் அவர்களை பெரும்பாலானோருக்கு தெரியவில்லை. தங்களது எம்.பி., யார் என்றே பொதுமக்களுக்கு தெரியாத போது, அவரது செயல்பாடுகளை கணக்கிட வேண்டிய அவசியமும் இங்கே இல்லை.
மேலும் சில காரணங்களாக 1998 ஆம் ஆண்டு கோவை குண்டுவெடிப்புக்கு காரணமான ,தீவிரவாதிகளை விடுதலை செய்வோம் என திமுக, விசிக, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் பேசி வருவதும் கோவை பகுதி மக்கள் மத்தியில் பெரும் கோவத்தை ஏற்படுத்தி உள்ளது. சிறுபான்மை மக்களின் ஓட்டுக்காக தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக என மக்கள் ஆவேசமடைகின்றனர்.
அதே நேரத்தில் அதிமுகவினரும் திமுகவிற்கு சளைத்தவர்கள் அல்ல என்பது போல் கோவை குண்டுவெடிப்பு தீவிரவாதிகளை விடுதலை செய்ய வேண்டும் என பேசி வருவதும் கோவை பகுதியில் அதிமுக சரிவிற்கு மிகமுக்கிய காரணம் ஆகும்.
மேலும் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, கோவை மாநகராட்சி வரி பன்மடங்கு உயர்வு, பத்திர பதிவு வரி உயர்வு, மானியங்கள் குறைப்பு ஆகியவையும் திமுகவிற்கு பாதகமாக பேசப்படுகிறது.
தொடர்ந்து அண்ணாமலை அவர்களும் திமுகவின் ஊழல் பட்டியல்களை, டிஎம்கே ஃபைல்ஸ் மூலமாக தொடர்ந்து வெளியிட்டு வருவது,
பொதுமக்களே வாயை பிளக்கும் அளவுக்கு திமுகவினரின் ஊழல் பட்டியல் நீள்கிறது. இதன் எதிரொலியாக,கோயம்புத்தூர் மக்கள் மத்தியில் திமுகவிற்கு எதிராகவும், பாஜகவிற்கு ஆதரவாகவும் அலை வீசுவது அறிய முடிகிறது.
அதே சமயத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை ,மக்களோடு மக்களாக, என் மண் -என் மக்கள் நடைபயணத்தை மேற்கொண்டதும் கோயம்புத்தூர் மக்கள் மனதில் பாஜகவின் தாக்கம் அதிகரித்துள்ளது என்பதை காட்டுகிறது.
மேலும் கேரளா கம்யூனிஸ்ட் அரசு கோவைக்கு தரவேண்டிய சிறுவாணி ஆற்று தண்ணீரை தர மறுப்பதும், அதை கோவை கம்யூனிஸ்ட் தட்டிக் கேட்க மறுத்து, வாய் மூடி மௌனம் காப்பதும், தொழிலாளர் நலனில் அக்கறை செலுத்தாமலும், கோவை எம்.பி., எங்கே இருக்கிறார்? என்று மக்கள் புலம்பும் வண்ணம் கம்யூனிஸ்ட் எம்.பி.யின் செயல்பாடு இருப்பதும், கோவையில் திமுக கூட்டணியான கம்யூனிஸ்ட்களுக்கு மிகப்பெரிய பின்னடைவை தந்துள்ளது, என்பதை தான் கருத்துக்கணிப்பு நமக்கு காட்டுகிறது.
கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டுமானம் ஏற்படுத்தியது, கோவை – சென்னை , கோவை – பெங்களூரு வந்தே பாரத் ரயில்களை மத்திய அரசு கொடுத்தது, கோவை இஎஸ்ஐ மருத்துவமனையை, மருத்துவ கல்லூரியாக மத்திய அரசு தரம் உயர்த்தியது என கோயம்புத்தூரை மையப்படுத்தி மத்திய பாஜக அரசு திட்டங்களை அறிவித்ததும் ,கோயம்புத்தூர் மக்கள் மத்தியில் பாஜகவின் செல்வாக்கு உயர காரணங்களாகும்.
எது எப்படியோ, 2024 பாராளுமன்ற தேர்தலில் கோயம்புத்தூர் மக்கள் பாஜகவை தேர்ந்தெடுக்க போகிறார்கள் என்பதை தான் இந்த கருத்துக்கணிப்பு நமக்கு பட்டவர்த்தனமாக காட்டுகிறது.
2024 தேர்தல் முடிவுகள் வரை பொறுத்திருப்போம்.