சென்னை பாஜக தலைமையகமான கமலாலயத்தில், இன்று (பிப்ரவரி 20) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில ஊடகப் பிரிவிற்கான ஒருநாள் பயிலரங்கம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றிப்பெறுவதற்காக,அதற்கான தேர்தல் பணிகளை பாஜக முன்னெடுத்துள்ளது. அந்த வகையில் இன்று சென்னை கமலாலயத்தில் ஊடக பிரிவிற்கான ஒருநாள் பயிலரங்கம் நடைபெற்றது.
பயிற்சி முகாமில் சேஷாத் பூனா வாலா, தேசிய ஊடகத் தொடர்பாளர், குரு பிரகாஷ் பாஸ்வான் தேசிய ஊடகத் தொடர்பாளர் ஆகியோர் சிறப்பு வகுப்புகள் எடுத்தனர். நமச்சிவாயம் புதுச்சேரி உள்ளாட்சித் துறை அமைச்சர் கலந்து கொண்டார்.
மற்றும் இந்த முகாமில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி பயிலரங்க பேருரை ஆற்றினார். மாநிலத் தலைவர் அண்ணாமலை சிறப்புரை ஆற்றினர்.
மேலும் கரு.நாகராஜன், ராமசீனிவாசன், நாராயணன் திருப்பதி, கே.பி.ராமலிங்கம், கார்வேந்தன், ஆசிர்வாதம் ஆச்சாரி, ஸ்ரீகாந்த் கருனேஷ், நம்பி நாராயணன் ஆகியோர் உரையாற்றினார்கள். ரெங்கநாயகலு, மாநிலத் தலைவர் ஊடகத்துறை, நன்றியுரையாற்றினார்.