மோடி மீண்டும் பிரதமராக 21 ஆயிரம் கிலோ மீட்டர், மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து, பெண் ஒருவர்தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
பிகல் ரைட்ஸ் கவுன்சிலிங் தேசிய பொதுச்செயலாளர் மாதாஜி ராஜலட்சுமி அவர்கள், நரேந்திர மோடி அவர்கள் மீண்டும் பிரதமராக வரவேண்டும் என புல்லட் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து , தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த 21ஆம் தேதி மதுரையில் புல்லட் மோட்டார் சைக்கிள் பயணத்தை துவங்கி திருச்சி, திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம், விழுப்புரம், செங்கல்பட்டு, போரூர் வழியாக சென்னைக்கு வந்தார்.
அவருக்கு லீகல் ரைட்ஸ் கவுன்சிலிங் தேசியத் தலைவர் மதன்குமார், துணைத்தலைவர் புகழேந்தி மற்றும் பலர் சால்வைகள், மாலைகள் அணிவித்து வரவேற்றனர்.
இந்த புல்லட் மோட்டார் சைக்கிளில், மிஷன் நரேந்திர மோடி 2024, மை வோர்ட் பார் மோடி என்ற ஹேஷ்டேக் வாசகத்துடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளார். இந்த மோட்டார் சைக்கிள் பயணம் ஆந்திரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக ,65 நாட்களில், 21 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.
இவரை போன்று பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், பொதுமக்களும், முதல் தலைமுறை வாக்காளர்களும், நரேந்திர மோடியை மூன்றாவது முறை பிரதமராக அமர்த்துவதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.