முறைகேடு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கில் ,சென்னை உயர்நீதிமன்றம் நாளை மறுநாள் (பிப்ரவரி 26) தீர்ப்பளிக்க உள்ளது.
2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை நடந்த திமுக ஆட்சிக்காலத்தில், வீட்டு வசதித்துறை அமைச்சராக ஐ.பெரியசாமி பதவி வகித்தார். அப்போது, வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த , கணேசன் என்பவருக்கு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் இருந்து, ஐ.பெரியசாமியை விடுவித்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் எம்பி., எம்எல்ஏ.,க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய, உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழக்கை தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்து விசாரித்து வந்தார்.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த 13-ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில், முறைகேடு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை எதிர்த்தவழக்கில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பிப்ரவரி 26ல் 10:30 மணிக்கு தீர்ப்பளிக்க உள்ளார்.
ஏற்கனவே செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அடுத்ததாக பொன்முடி அமைச்சர் பதவியை இழந்து, எப்போது வேண்டுமானாலும் சிறைக்கு செல்ல காத்துக்கொண்டிருக்கிறார் தற்போது ஐ.பெரியசாமி மீதான வழக்கில் தீர்ப்பு வரஉள்ளது. விரைவில் புழல் சிறையில் ,திமுக அமைச்சர்களுக்கு என்று தனிச்சிறை உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.