பாலக்கோடு அரசு மருத்துவமனையில், இன்று (பிப்ரவரி 25) ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் ஆய்வுக்கூடம் கட்டுவதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு மருத்துவமனையில் ஆய்வுக்கூடம் கட்டுவதற்காக, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்தவாறு காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இதன் மதிப்பு ரூ.1.25 கோடி ஆகும்.
பாலக்கோடு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் பங்கேற்றனர்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு ஆய்வுக்கூடம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டியதற்கு ,பொதுமக்கள் தங்களது நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.