கர்நாடக சட்டப்பேரவையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பியதற்கு, காங்கிரஸ் அரசை கண்டித்து பாஜக கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் மாநிலங்களவை தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் வேட்பாளர் சையத் நசீர் ஹூசேன் வெற்றிபெற்றதாக அறிவிப்பு வெளியானபோது, ‘சையத் நசீர் ஹூசேன் ஆதரவாளர்கள் முழக்கம் எழுப்பினர். அப்போது ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என முழக்கம் எழுப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக கன்னட செய்தி சேனல்களில் செய்தி வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பியதற்கு கர்நாடக மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா, எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோகா, முன்னாள் முதல்வரும் மஜத தலைவருமான குமாரசாமி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தை கண்டித்து பாஜகவினர் நேற்று பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காங்கிரஸ் கட்சி பாகிஸ்தான் ஆதரவு முழக்கம் எழுப்புகிறது. தமிழகத்தில் உள்ள திமுக கட்சி ,சீனா ராக்கெட்டை விளம்பரம் செய்கிறது. இவர்கள்தான் இந்தியாவை காப்பாத்துகிறோம் என்று மக்களிடையே வீண் பிரச்சாரம் செய்கின்றனர். இது போன்று தேசத்திற்கு எதிராக செயல்படும் இன்டி கூட்டணிக் கட்சிகளுக்கு மக்கள் கட்டாயம் தேர்தல் மூலம் பாடம் புகட்டுவார்கள் என்பது மட்டும் உண்மை.