ராஜ்யசபாவில் அதிகரிக்கும் பா.ஜ.க.,வின் பலம்!

ராஜ்யசபா தேர்தலில் கூடுதல் இடங்களில் வெற்றி பெற்றதன் வாயிலாக, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் உயர்ந்துள்ளது. இதையடுத்து ராஜ்யசபாவில் பெரும்பான்மை இடங்களை இக்கூட்டணி பெற, மூன்று இடங்கள் மட்டுமே தேவை என்ற நிலை உள்ளது.

நாடாளுமன்றத்தில், மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யும் மசோதா இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே சட்டமாக இயற்ற முடியும்.

தேசிய ஜனநாயக கூட்டணி மக்களவையில் பலம் பொருந்திய நிலையில் இருந்தாலும், ராஜ்யசபாவில் பெரும்பான்மை இல்லாததால், சில முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற முடியாமல் போனது.

இந்த நிலையில், நாடு முழுதும் 15 மாநிலங்களில் 56 ராஜ்யசபா எம்.பி.,க்கள் பதவிக்காலம் நிறைவடைந்தது. இதையொட்டி அவற்றை நிரப்ப ராஜ்யசபா தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 41 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து மூன்று மாநிலங்களில் 15 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் 10 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது.

இதன் வாயிலாக ராஜ்யசபாவில் பாஜகவின் பலம் 97 ஆகவும், தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 118 ஆகவும் அதிகரித்துள்ளது.

ராஜ்யசபாவில் பெரும்பான்மை பலம் பெற 121 இடங்கள் தேவை என்ற நிலையில், தற்போது மூன்று இடங்கள் மட்டுமே தேசிய ஜனநாயக கூட்டணிக்கு குறைவாக உள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top