முதல் பட்டியலில் 195 இடங்களுக்கான வேட்பாளர்கள் – வெளியிட்டது பாஜக.. வாரணாசியில் பிரதமர் மோடி! காந்திநகரில் அமித்ஷா !

மக்களவை தேர்தலுக்கான பாஜக சார்பில் 195 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று (02.03.2024) மாலை வெளியிடப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக போட்டியிட உள்ளார்.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக தனது  முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.  பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே, 195 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.  அதன்படி பிரதமர் நரேந்திர மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட உள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

அதன்படி உத்தர பிரதேசத்தில் 51 வேட்பாளர்கள், மேற்கு வங்கத்தில் 20, மத்திய பிரதேசத்தில் 24, குஜராத் மற்றும் ராஜஸ்தானில் 15, கேரளாவில் 12, தெலங்கானாவில் 9, அஸ்ஸாமில் 11, ஜார்கண்ட், சத்தீஸ்கர் சேர்த்து 11, டெல்லி 5, ஜம்மு காஷ்மீர் 2, உத்தரகண்ட் 3, அருணாச்சல பிரதேசம் 2, கோவா, திரிபுரா, அந்தமான், நிகோபார், டையுடாமன் உள்ளிட்டவைகளில் தலா ஒரு வேட்பாளர் என 195 வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 

குஜராத் மாநிலம், போர்பந்தரில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னோ

மத்திய அமைச்சர் வி.முரளிதரன், கேரளா அட்டிங்கள் தொகுதி

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்

அருணாச்சல மேற்கில் இருந்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

மத்திய பிரதேசம், வித்திஷா தொகுதியில் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்

மத்திய பிரதேசம், குணா தொகுதியில் மத்திய உணவுத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா

அமேதி தொகுதியில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி

ராஜஸ்தான், ஆல்வார் தொகுதியில் மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ்

அசாம் மாநிலம் திப்ருகார் சேர்ந்த்தில்  சர்பானந்தா சோனோவால், வடகிழக்கு டெல்லியில் மனோஜ் திவாரி, குஜராத் போர்பந்தரில் இருந்து சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, நவ்சாரியிலிருந்து சிஆர் பாட்டீல் ஆகியோர் இந்த பட்டியலில்  அடங்குவர்.

இந்தப் பட்டியலில் 34 மத்திய அமைச்சர்கள், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும்  முன்னாள் முதல்வர்கள் இருவரின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக தாவ்டே தெரிவித்தார்.

முதல் பட்டியலில் 27 எஸ்சி வேட்பாளர்கள் மற்றும் 18 எஸ்டி வேட்பாளர்கள் உள்ளனர். இந்த 195 வேட்பாளர்களில் 57 ஓபிசி வேட்பாளர்களை நாங்கள் நிறுத்துகிறோம் என்று தாவ்டே தெரிவித்தார்.

இந்த அறிவிப்பின் மூலம் 2024 தேர்தலுக்கு முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கட்சியாக பாஜக விளங்குகிறது. பாஜ்க மட்டும் 370, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 400 தொகுதிகள் என்ற இலக்கை அடைய பாஜக தனது ஓட்டத்தை ஆரம்பித்து விட்டது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இன்னும் மற்றவர்களை காணும் என்பதுதான் இன்றைய நிலை. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top