ஜாபர் சாதிக்கை சந்தித்து யார்? சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை!

திமுகவை சேர்ந்த நிர்வாகியும், போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கை சந்தித்தது யார்? யார் என்று அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்க்கை வைத்து கண்டறிய டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவு மற்றும் போதைப் பொருள் தடுப்புபிரிவு அதிகாரிகள் அடங்கிய தனிப்படை, மேற்கு டெல்லியில் உள்ள கைலாஸ் பார்க் பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் இருந்து செயல்பட்டு வந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலை கைது செய்தனர். சென்னையை சேர்ந்த முகேஷ் (வயது 33), முஜிபுர் ரகுமான் (34), விழுப்புரத்தை சேர்ந்த அசோக் (34) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 கிலோ போதையூட்டும் வேதிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கடத்தல் கும்பலுக்கு மூளையாக செயல்பட்டது தமிழ் சினிமா தயாரிப்பாளரும், தி.மு.க. சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக், நடிகர் மைதீன், மற்றும் சலீம் என தகவல் வெளியானது. இதனை கேள்விப்பட்ட திமுக பயத்தில் கட்சியில் இருந்து ஜாபர் சாதிக்கை நீக்கியது. தற்போது ஜாபர் சாதிக் தலைமறைவாக இருக்கிறார்.

அவர் உள்பட வழக்கில் தொடர்புடையதாக மேலும் சிலரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்த சம்மனை சென்னை மயிலாப்பூர், சாந்தோம் பகுதி அருணாச்சலம் தெருவில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஒட்டினர்.

மேலும், தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வெளிநாட்டிற்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக லுக் அவுட் நோட்டீஸை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கொடுத்துள்ளனர். அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜாபர் சாதிக் வீட்டுக்கு யார்? யார் வந்து சென்றார்கள் என்பன பற்றிய ஆய்வு டெல்லி போலீசாரால் மேற்கொள்ளப்படுகிறது. சாதிக் வீட்டில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி கேமராவின் ஹாடிஸ்க் டெல்லிக்கு எடுத்து சென்று அதன் அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொள்ள போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் வெறும் கையுடன் வந்து வீட்டில் இருந்து சூட்கேசுடன் சென்ற சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பற்றிய விபரங்கள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அதன் அடிப்படையில் விசாரணை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் மேற்கொள்வார்கள் என கூறப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top