குஜராத் போல், தெலுங்கானாவையும் வளர்ச்சி அடைந்த மாநிலமாக மாற்ற பிரதமரின் உதவி தேவை என முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம், அடிலாபாதில் 53,000 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி மார்ச் 4ஆம் தேதி துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசுகையில், ‘‘பிரதமர் நரேந்திர மோடி என் மூத்த சகோதரர் போன்றவர். மூத்த சகோதரரின் ஆதரவு கிடைத்தால் மட்டுமே, ஒவ்வொரு முதல்வரும், தங்கள் மாநிலங்களில் வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள முடியும். குஜராத் போல், தெலுங்கானாவையும் வளர்ச்சி அடைந்த மாநிலமாக மாற்ற பிரதமரின் உதவி தேவை,’’ என்றார்.