தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் மற்ற இடங்களில் கணிசமான வாக்குகளைப் பெறும் என்றும் இந்தியா டீவி மற்றும் சிஎன்எக்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் யாத்திரைக்குப் பின்னர், தமிழகத்தில் பட்டி தொட்டி எங்கும் பாஜக வளர்ந்துள்ளது. கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், நடுத்தர வர்க்கத்தினர் சாமானியர்கள், விவசாயிகள் என அனைவரும் பாஜகவில் தங்களை இணைத்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்களில் அனைவரும் பயனடைந்துள்ளனர்.
விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் ரூ.6,000, வீடுகளுக்கு ஜல் ஜீவன் திட்டத்தின் வாயிலாக பாதுகாப்பான குடிநீர், சிறு குறு தொழில் முனைவோர்களுக்கு மானியக்கடன், பெண்கள் முன்னேற பல்வேறு வகையிலான நிதியுதவி என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
இதற்கிடையே விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரஉள்ள நிலையில் , தமிழகத்தில் பல்வேறு கருத்துக்கணிப்புகளை தொலைக்காட்சிகள் வெளியிட்டு வருகிறது. யாருக்கு அதிகமான வாக்குகள் மற்றும் தொகுதிகள் கிடைக்கும் என பல்வேறு தரப்பிலான மக்களை சந்தித்து கருத்துக்கணிப்பு கள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி தமிழகத்தில் இந்தியா டீவி, சிஎன்எக்ஸ் தொலைக்காட்சி இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் பாஜக 4, திமுக 20, அதிமுக 4, காங்கிரஸ் 6, மற்றவை 5 தொகுதிகளில் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பாஜக வளரவே இல்லை என்று திராவிடக் கட்சிகள் சொல்லிக்கொண்டு இருந்தனர். ஆனால் இன்று நாளுக்கு நாள் பாஜகவின் வெற்றி வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. இவை மேலும் தேர்தல் நெருங்க, நெருங்க அதிகரிக்கக்கூடும் என மக்கள் கருதுகின்றனர் .