பிரதமர் மோடியின் சிறப்பான நிர்வாக செயல்பாடு: 75 சதவீதம் பேர் ஆதரவு!

பிரதமராக நரேந்திர மோடியின் செயல்பாடு தொடர்பான ஆய்வை இப்சாஸ் நிறுவனம் மேற்கொண்டது. கடந்த பிப்ரவரி மாதம் அந்நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி 75 சதவீதம் பேர் பிரதமர் மோடியின் செயல்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 65 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

தற்போது பிரதமர் மோடிக்கான ஆதரவு தொடர்ந்து அதிகரித்து வருவதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு டிசம்பரில் மோடியின் செயல்பாடு மீதான ஆதரவு 60 சதவீதமாகவும், 2023 பிப்ரவரியில் 67 சதவீதமாகவும் செப்டம்பரில் 65 சதவீதமாக இருந்தது.

இந்த நிலையில், தற்போது அது 75 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக வட மண்டலத்தில் ஆதரவு 92 சதவீதமாக உள்ளது. கிழக்கு மண்டலத்தில் ஆதரவு 84 சதவீதமாகவும், மேற்கு மண்டலத்தில் 80 சதவீதமாகவும் உள்ளது. தென்மண்டலத்தில் 35 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கல்விதுறை சார்ந்து பிரதமர் மோடியின் செயல்பாடுகளுக்கு 76 சதவீதமும், தூய்மை பணிகளுக்கு 67 சதவீதமும், சுகாதார செயல்பாடுகளுக்கு 64 சதவீதமும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக ஜி20 உச்சி மாநாடு, அயோத்தி ராமர் கோவில் திறப்பு உள்ளிட்டவை பிரதமர் மோடி மீதான மக்களின் ஆதரவு அதிகரித்துள்ளது என அந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top