ராமரை அவமதித்தால் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி!

எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் பகவான் ஸ்ரீ ராமரை அவமதிப்பது போல் கருத்துக்கள் வெளியிட்டு வருவதை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக சாடியுள்ளார்.

எதிர்க்கட்சிகளின் இ.ண்.டி. கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் பகவான் ஸ்ரீ ராமரை அவமதித்து வருகின்றனர். இதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
பகவான் ஸ்ரீ ராமர் பற்றி திமுக எம்.பி., 2ஜி ஊழல் ராசா சில நாட்களுக்கு முன் ஒரு கூட்டத்தில் சர்ச்சையை ஏற்படுத்தும் அளவிற்கு விமர்சனம் செய்திருந்தார். இந்த கருத்துக்கு பாஜக கடுமையான கண்டனத்தை பதிவு செய்தது.

இந்த நிலையில், யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் பிரதமர் நரேந்திர மோடி மேற்கண்ட விமர்சனத்தை முன்வைத்தார்.

பீகாரில் ரூ.1,200 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள் தொடக்க விழா, மேற்கு சாம்பரான் மாவட்டம் பெட்டியா பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகையில் , பீகாரில் சுமார் 15 ஆண்டுகால ராஷ்ட்ரிய ஜனதாதள ஆட்சி காலத்தில் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவும் அவரின் குடும்பத்தினரும்ஆட்சியை ஊழல் மயப்படுத்தினர். அவர்கள் இந்த மாநிலத்திற்கு பெரும் குற்றம் இழைத்தவர்கள் ஆவர். ராஷ்ட்ரிய ஜனதா தளம் காங்கிரஸ் கூட்டணியின் தவறான நிர்வாகத்தால் மாநிலத்தை விட்டு இதர பகுதிகளுக்கு இடம்பெறும் நிலைக்கு இளைஞர்கள் தள்ளப்பட்டனர்.

ஒரு முழுத் தலைமுறையின் எதிர்காலமும் ஆபத்துக்கு உள்ளாக்கப்பட்டது. அதே நேரம் ஒரே ஒரு குடும்பம் மட்டும் வளர்ச்சி அடைந்துள்ளது. இங்கு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகே இந்த மாநிலம் காப்பாற்றப்பட்டது. எனக்கென சொந்த குடும்பம் இல்லாதது எதிர்க்கட்சி தலைவர்களுக்கு இப்போது பெரிய பிரச்சினையாக இருக்கிறது. மகாத்மா காந்தி, அம்பேத்கர், ஜெயப்பிரகாஷ் நாராயண், கர்ப்பூரி தாக்கூர் போன்ற தலைவர்களும், தங்களின் குடும்பத்தை முன்னிறுத்தவில்லை. இந்த தலைவர்கள் இப்போது உயிரோடு இருந்தால் அவர்களையும் எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சிப்பார்கள்.

காங்கிரஸ் கட்சி,ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் இதர கூட்டணி கட்சிகள் ஏற்படுத்திய தடைகளால் அயோத்தியில் கடவுள் ஸ்ரீ ராமர் பல ஆண்டுகளாக கூடாரத்திலேயே இருக்க நேரிட்டது. ஆனால் பா.ஜ.க., ஆட்சியில் தடைகள் அகற்றப்பட்டு, ஸ்ரீ ராமருக்கு பிரம்மாண்டமான கோயில் கட்டப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் இ.ண்.டி. கூட்டணி தலைவர்கள் கடவுள் ஸ்ரீ ராமரை அவமதிக்கும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top