காவிரியில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்திற்கு கொடுக்க முடியாது என காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா பேசியிருப்பது விவசாயிகளை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திமுக ஆட்சி அமைந்த பின்னர் முதல்வர் ஸ்டாலின் தமிழக உரிமைகளை கர்நாடக காங்கிரஸ் அரசிடம் அடமானம் வைத்துவிட்டார். இதுவரையில் காங்கிரஸ் அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்கவில்லை. இதனை எதிர்த்து ஸ்டாலின் ஒரு வார்த்தை கூட பேசாமல் மவுனம் காத்து வருகிறார்.
ஆனால் கர்நாடகாவில் பாஜக ஆட்சி இருந்தபோது தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீர் உரிய முறையில் வழங்கப்பட்டு வந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் காங்கிரஸ் அரசு தமிழர்களை வஞ்சித்து வருகிறது.
இந்த நிலையில், கர்நாடக காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா பேசும்போது, தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். எங்களுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது, குடிநீர் தேவைகளுக்காக வைத்துள்ளோம். மத்திய அரசு சொன்னாலும் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க மாட்டோம் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இவரது பேச்சால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சாகுபடி செய்ய முடியாமல் ஏற்கனவே நடவு செய்த பயிர்களுக்கு தண்ணீர் இன்றி கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை எதையும் பொருட்படுத்தாமல் ஸ்டாலின், நாடாளுமன்றத் தேர்தலுக்காக காங்கிரசிடம் கொஞ்சிக் குலாவி வருவதை பார்க்க முடிகிறது.
இதற்கு எல்லாம் தமிழக விவசாயிகள் வரஉள்ள நாடாளுமன்றத் தேர்தல் மூலம் திமுகவிற்கு தக்க பதிலடி கொடுப்பது மட்டும் உறுதி.