தமிழக பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களின் முதல் பட்டியல் நேற்று மாலை வெளியானது. அந்த பட்டியலில் தலைவர் அண்ணாலை கோவையில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அறிந்த தொண்டர்கள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்த நிலையில், தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைத்தளப்பதிவில் நெகிழ்ச்சியுடன் கூறியிருப்பதாவது:
என் மீது நம்பிக்கை வைத்து 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கோவையில் என்னை போட்டியிட வைத்ததற்காகவும், தமிழகத்தை வளர்ச்சியின் திசையினை நோக்கி அழைத்து செல்லும் அரசியல் மாற்றத்தை தமிழக மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்திலும் தமிழக பாஜக முதல் வேட்பாளர் பட்டியல் வந்துள்ளது.
இதற்காக, நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, நமது பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் ஆகியோருக்கு நன்றி.
தமிழகத்திற்கான வேட்பாளர்களின் முதல் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. என் மீதும் மற்ற வேட்பாளர்கள் மீதும் பாஜக தலைமை வைத்திருந்த நம்பிக்கைக்காக நாங்கள் உறுதியாக உழைப்போம். இதற்காக, மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
எதிர்வரும் மக்களவைத் தேர்தலில், நாடு முழுவதும் 400 க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறுவோம். தமிழகத்தின் பங்களிப்பு நிச்சயம் இருக்கும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.