மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்படி மக்களவை தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்கள் பட்டியல் நேற்று (மார்ச் 22) அறிவிக்கப்பட்டது. அதில் காஞ்சிபுரம் தொகுதியில் மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. விரைவில் அறிவிக்கப்படும் என அக்கட்சி தலைமை தெரிவித்தது.
இதற்கிடையே தருமபுரி தொகுதி பாமக வேட்பாளர் மாற்றப்பட்டு, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் மனைவியான சவுமியா அன்புமணி போட்டியிடுவார் என அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில், காஞ்சிபுரம் (தனி) தொகுதிக்கு பாமக சார்பில் ஜோதி வெங்கடேஷ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.