விருதுநகர் மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் கௌசிக் என்பவர் போட்டியிடுகிறார். அவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். பின்னர் உறுதிமொழியை வாசிக்க சொல்லி நா.த.க வேட்பாளரை தேர்தல் அலுவலரான ஜெயசீலன் கூறினார். படிக்கச் தெரியாமல் திருதிருவென முழித்த நா.த.க வேட்பாளர் தனக்கு தமிழ் படிக்க தெரியாது என்று கூறியுள்ளார்.
அதன் பின் தேர்தல் அலுவலரே உறுதிமொழியை படிக்க வேட்பாளர் திரும்ப சொன்னார். இதற்கு நாம் தமிழர் கட்சினர், எங்கள் வேட்பாளர் ஓமன் நாட்டில் படித்ததால் தமிழ் படிக்க தெரியாது என்று விளக்கம் அளித்துள்ளனர்.
ஒரு வேளை இவர் ஜெயித்தால் எப்படி மக்களின் மனுக்களை வாங்கி படித்து, பிரச்னைகளை தீர்ப்பார். தமிழ் படிக்க மட்டும் தெரியாதா இல்லை பேசவும் தெரியாதா என்பது தெரியவில்லை.நாம் தமிழர் என்று கட்சிக்கு பெயர் மட்டும் வைத்தால் போதுமா? தமிழ் தெரிந்தவர்களை வேட்பாளராக கூட நிறுத்த முடியாத ஒரு கட்சிக்கு நாம் தமிழர் என்று பெயரா?இது போன்றவர்களை வேட்பாளராக நிறுத்தினால் அவர்களுக்கு ஓட்டு போடும் மக்களின் நிலை அவ்வளவுதான் என சமூக வலைத்தளங்களில் சீமானை விமர்சித்து வருகின்றனர்.