மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சேலையை நாங்கள் இழுக்கவில்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் பச்சையாக பொய் சொல்லி இருப்பது வேடிக்கையாக உள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தாக்கல் செய்தன. அப்போது பேசிய திமுக எம்பி கனிமொழி மகாபாரதத்தை நினைவு கூர்ந்து, திரெளபதி ஆடையை பிடித்து இழுத்த நிலை போன்ற செயல் இன்று மணிப்பூரில் நடந்துள்ளது என்றார்.
அதற்கு காட்டமாக பதில் அளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “கனிமொழிக்கும் நான் ஒரு நிகழ்வை நினைவு கூர விரும்புகிறேன். புனிதமான தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 25, 1989-ல் நடந்த முக்கியமான ஒரு நிகழ்வு அது.
அன்றைய தினம் பேரவையின் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதாவின் சேலையை பிடித்து திமுகவினர் இழுத்தனர். அப்போது அதை பார்த்துக்கொண்டிருந்த திமுக உறுப்பினர்கள், ஜெயலலிதாவை பார்த்து சிரித்தனர்… நகைத்தனர்! அப்படிப்பட்ட நீங்கள், இன்று கௌரவர் சபா பற்றி பேசுகிறீர்கள்?! நீங்கள் திரௌபதி பற்றி பேசுகிறீர்கள்?! நீங்கள்தானே ஜெயலலிதாவை அவமதித்தீர்கள்.
அந்த நாளில்தான் ஜெயலலிதா ‘இனி நான் முதலமைச்சர் ஆகாமல் அவைக்கு வரமாட்டேன்’ என சபதம் எடுத்து சபையில் இருந்து வெளியேறினார். சொன்னபடியே செய்தார். முதல்வராகத்தான் சட்ட மன்றம் திரும்பினார்.
அன்று ஜெயலலிதாவை பேசியவர்கள், இன்று திரௌபதி பற்றி பேசுவது, அதிர்ச்சியாக இருக்கிறது என்றார். மகாபாரதத்தில் பார்த்துக் கொண்டு இருந்தவர்களுக்கு தண்டனை கிடைத்தது என்றால் உங்களுக்கும் கிடைக்கும், என்றார்.
இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இது குறித்து கூறியிருப்பதாவது, “ஜெயலலிதாவிற்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் அப்படியொரு சம்பவம் நடைபெறவில்லை. அது அவராக நடத்திக் கொண்ட நாடகம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் ஸ்டாலின் பச்சையாக பொய் சொல்கிறார். இதுபற்றி, அப்போது சட்டசபையில் இருந்த பத்திரிக்கையாளர் துரை கருணா கூறியிருப்பதாவது: முதலமைச்சராக இருந்த கருணாநிதி, மைக்கை கையில் பிடித்துக்கொண்டு, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதாவை பார்த்து மிரட்டியுள்ளார். தகாத வார்த்தை எல்லாம் பேசியுள்ளார். இது பற்றி ஜெயலலிதாவே ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் என்று கூறினார்.
மேலும் நியாயம் கேட்ட ஜெயலலிதாவை திமுக எம்.எல்.ஏ.க்கள் எட்டி உதைத்துள்ளனர். தற்போது அமைச்சராக இருக்கின்ற ஐ.பெரியசாமியும் ஜெயலலிதாவை காலால் எட்டி உதைத்துள்ளார். அங்கு அவரை மானப்பங்கம் செய்ததாக பத்திரிக்கையாளர் துரை கருணா ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
இது பற்றி தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: ‘‘ஜெயலலிதா சேலையை இழுத்தாங்க.. என்னோட கண்முன்னாடி நடந்துச்சு’’ என நேரடி சாட்சியமான பத்திரிக்கையாளர் திரு.துரை கருணா இங்கிருக்க, அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என ஒரு முதல்வர் அப்பட்டமாக பொய் சொல்கிறார் என்றால் அவரின் தராதரம் என்ன என நாம் தெரிந்துக்கொள்ளலாம். மாண்புமிகு இந்திய நிதி அமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் சொல்லியவை உண்மையே. தமிழகத்தில் ஆட்சியில் இருப்பதனால் வரலாற்றை மாற்றி எழுதலாம் என பகல் கனவு காண வேண்டாம் முதல்வரே! எனப் பதிவிட்டுள்ளார்.