பழனியில் காவல்துறை அராஜகம்.. ஆளுநரை வரவேற்க சென்ற பாஜகவினர் கைது!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்வதற்காக நேற்று (ஆகஸ்ட் 24) வருகை புரிந்தார். அப்போது அவரை வரவேற்க சென்ற பாஜகவினரை போலீசார் தடுத்து நிறுத்தி அராஜகத்தில் ஈடுபட்டதுடன் அவர்களை கைது செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி கோவை  வந்திருந்தார். அந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஆளுநர் சென்றிருந்தார்.

அவரது வருகைக்கு தி.க., திமுக உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சாமி தரிசனத்துக்கு வரும் ஒருவரை எதிர்ப்பது எந்த வகையிலும் நியாயம் அல்ல, எனவே அந்த எதிர்ப்புக்கு அனுமதி கூடாது என காவல்துறையினரிடம் பாஜக தரப்பில் கூறியும் காவல்துறை கண்டு கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே அவர்களுக்கு  பதிலடி கொடுப்பதற்காக திண்டுக்கல் மாவட்ட பாஜகவினர் கையில் தேசியக் கொடியுடன் ஆளுநரை வரவேற்கச் சென்றனர்.

அப்போது திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கனகராஜை டி.எஸ்.பி. சரவணன் கைது செய்வதற்காக கையை பிடித்து இழுத்தார். இதனை கண்ட பாஜக தொண்டர்கள் போலீசாரின் அத்துமீறலை கண்டித்தனர். இதன் பின்னர் அநாகரிகமான முறையில் நடந்துக்கொண்ட டி.எஸ்.பி.க்கு எதிராக பாஜக  தொண்டர்கள் கண்டனங்களை தெரிவித்தனர். அங்கு போலீசாருக்கும், பாஜகவினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் பாஜகவினரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். ஆளுநரை வரவேற்க ” தேசியக் கொடியுடன் சென்றவர்களை கைது செய்து எதிர்ப்பு தெரிவித்தவர்களை கண்டுக்காமல் விட்டது திராவிட மாநகர் ஆட்சி என பொதுமக்கள் விமர்சித்தனர்.  திமுக அரசின் போலீசார் அத்துமீறி பாஜக வினரை  கைது செய்திருப்பது அங்கு  கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top