நமது பாரம்பரிய அறிவுமுறைகளை மீட்டெடுக்கவும், நவீன கல்வி முறைகளை கையாண்டு புத்துயிரூட்டவும் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக மத்திய கல்வித்துறை இணையமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் புதிய உள்கட்டமைப்பு வசதிகளைத் மத்திய கல்வித்துறை இணையமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார் நேற்று (அக்டோபர் 10) தொடங்கி வைத்தார்.
பின்னர் கூட்டத்தில் பேசிய அவர், நாளந்தா போன்ற பாரம்பரிய பல்கலைக்கழகங்கள் நமக்கு அடையாளமாகத் திகழ்கின்றன. உயர்தரமான கல்வி, அறிவுசார் ஆர்வம், அறிவு கலாச்சாரம் ஆகியவற்றை மேம்படுத்தி நமக்கு அவை வழிகாட்டுகின்றன.
“ஆசிரியர்கள் நாட்டின் எதிர்கால சிற்பிகள் என்று கூறிய அவர், முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அவர்களது பணி சிக்கல் நிறைந்ததாக மாறியுள்ளது. நவீன உலகத்தின் சிக்கல்களுக்கிடையே ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வழிகாட்டி வருகின்றனர்.
“டிஜிட்டல் இந்தியா முன்முயற்சி, தொழில்நுட்பத்தின் ஆற்றலைப் பயன்படுத்தி மக்களின் வாழ்வுமுறை எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது. நமது தேசியக் கல்விக்கொள்கை 2020 கல்வியில் தொழில்நுட்பம், ஒளிமயமான, சமத்துவமான, முன்னேற்றம் மிகுந்த எதிர்காலத்தை நமது நாட்டுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அனைவருக்கும் கல்வி என்பதை உறுதிசெய்யும் அரசின் அர்ப்பணிப்புக்கு தேசிய கல்விக்கொள்கை ஒரு சான்றாகத் திகழ்கிறது.
அறிவையும், திறன்களையும் வளர்ப்பதுடன், முழுமையான வளர்ச்சியை உருவாக்கும் கல்வியை அனைவருக்கும் வழங்க இது வகை செய்கிறது. தேசிய கல்விக்கொள்கை, தொழில்நுட்ப அடிப்படையிலான கற்றல் முறை, செயற்கை நுண்ணறிவைப் பொறுப்பான முறையில் பயன்படுத்தும் தேசிய திட்டம் போன்ற முன்முயற்சிகளுடன் இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதை உறுதிசெய்யும். இவை அடுத்த 25 ஆண்டுகள் நாட்டின் முன்னேற்றத்தில் மிக முக்கியமானவை ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.