பா.ஜ.க விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுப் பிரிவின் மாநிலத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டியை கட்சியின் கொடிகம்பம் அகற்றும் விவகாரத்தில் திமுக அரசு வேண்டும் என்றே பொய் குற்றச்சாட்டில் கைது செய்து சிறையில் அடைத்தது.
இதன் பின்னர் சிறையில் உள்ள அமர்பிரசாத் ரெட்டியை அரசியல் பழிவாங்கும் நோக்கில் விடியாத திமுக அரசு மேலும் இரண்டு வழக்குகளில் கைது செய்தது. இந்த வழக்குகள் தொடர்பாக இன்று (அக்டோபர் 27) சென்னை எழும்பூர், சைதாப்பேட்டை நீதிமன்றங்களில் அமர் பிரசாத் ஆஜர்படுத்தப்பட்டார்.
அதாவது வள்ளூவர் கோட்டம் முன்பு பாஜக நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது, போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளரிடம் தகராறு செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில் கைது செய்திருக்கும் அமர் பிரசாத் ரெட்டியை நுங்கம்பாக்கம் போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவின்போது சென்னை கோட்டூர்புரத்தில் வைக்கப்பட்டிருந்த விளம்பரத்தில் ஸ்டாலின் படத்துடன் பிரதமர் மோடியின் படத்தை ஒட்டியதாக அமர் பிரசாத் ரெட்டி மீது எழுந்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் போலீஸார் அமர் பிரசாத் ரெட்டி மீது வழக்கு பதிந்திருக்கும் நிலையில், கோட்டூர்புரம் போலீஸார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர். அவரை விசாரித்த நீதிபதி நிபந்தனையுடன் அமர் பிரசாத் ரெட்டிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் அமர்பிரசாத் ரெட்டி மீது திமுக அரசு வேண்டும் என்றே வழக்குகளை பதிவு செய்து கைது செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து மூன்று வழக்குகளை போட்டு குண்டாஸில் உள்ளே வைக்க திமுக திட்டம் போட்டது. ஆனால் தற்போது ஒரு வழக்கில் ஜாமீன் கிடைத்துள்ளது. விரைவில் மற்ற இரண்டு வழக்குகளிலும் இருந்தும் விடுதலை பெற்று அமர்பிரசாத் ரெட்டி வெளியில் வருவார் என்று கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அமர் பிரசாத் கைது பற்றிய கேள்வி ஒன்றுக்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை, அண்ணாமலையுடன் பயணத்தால் கைது உறுதி என்று கூறியது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கைதுக்கு பயப்படாதவர்கள் தான் தன்னுடன் பயணிக்கிறார்கள் என அண்ணாமலை குறிப்பிட்டிருப்பது, தொண்டர்களுக்கு இன்னும் உத்வேகம் அளித்திருக்கிறது!