விடியாத அரசால் பாதிக்கப்பட்ட பாஜகவினரிடம் மேலிட குழுவினர் ஆய்வு!

விடியாத ஆட்சியில் தமிழக பாஜகவினர் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளது தொடர்பாக ஆய்வு செய்ய மேலிட குழுவினர் நேற்று (அக்டோபர் 27) சென்னை வருகை தந்தனர்.   பாதிக்கப்பட்டவர்கள் உடனான விசாரணைக்குப் பிறகு தமிழக ஆளுநரிடம் அறிக்கை அளிக்க உள்ளதாக குழுவின் தலைவரும்  கர்நாடக முன்னாள் முதல்வருமான சதானந்த கவுடா தெரிவித்தார்.

சென்னை, பனையூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வீடு முன்பாக கட்சி கொடிக்கம்பம் நிறுவப்பட்டது. இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத திமுக சில தீய சக்திகளை தூண்டிவிட்டு போலீஸ் படையுடன் கொடி கம்பத்தினை அகற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் போலீசாரின் அராஜகத்தை கண்டித்துப் போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டம் நடத்திய பாஜகவினர் மீது கண்மூடித்தனமாக போலீசார் தாக்குதல் நடத்தினர். இதில் சிலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிலரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பாஜக விளையாட்டு பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து வேறு இரண்டு வழக்குகளில் அவர் சேர்க்கப்பட்டு  மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டார். 

இந்நிலையில் தமிழகத்தில் ஆளும் விடியாத திமுக அரசால் வேண்டும் என்றே பாஜகவினர் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்படுவது குறித்து ஆய்வு செய்ய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா 4 பேர் கொண்ட மேலிட குழுவை அமைத்து அதிரடியாக உத்தரவிட்டார்.

இந்தக் குழுவில் கர்நாடகா முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா, ஆந்திர மாநில பாஜக தலைவர் புரந்தரேஸ்வரி, எம்.பி.க்கள் சத்யபால் சிங், பிசி மோகன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்தக் குழுவை வரவேற்றிருந்த மாநில தலைவர் அண்ணாமலை, கடந்த 2 ஆண்டுகளாக பாஜகவின் சமூக ஊடக நிர்வாகிகள் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

நள்ளிரவு மற்றும் அதிகாலையில் கைது செய்வது, வார இறுதி நாட்கள் அல்லது தொடர் விடுமுறை நாட்களில் கைது செய்வது போன்ற செயல்களில் திமுக அரசு ஈடுபடுகிறது. சமூக மற்றும் முக்கிய ஊடகங்களில் பிரபலமானவர்களை குறிவைத்து கைது செய்வதில் திமுக அரசு தீவிரம் காட்டுகிறது. இதுபோன்ற அத்துமீறல்களையும், அதிகார துஷ்பிரயோகத்தையும் இந்தக் குழு வெளிச்சத்துக்கு கொண்டு வரும் என நம்புகிறோம் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நேற்று  (அக்டோபர் 27) சென்னை கமலாலயம் வந்து சேர்ந்த குழுவினர், பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை  சந்தித்தார் சதானந்தா கெளடா..

அப்போது அவர் கூறியதாவது:- திமுக அரசால் பாஜக பாதிக்கப்பட்டது குறித்து ஆளுநரிடம் அறிக்கை அளிக்க உள்ளோம். இதேபோல் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் பாஜக தேசிய தலைமைக்கு அறிக்கை அளிக்க இருக்கிறோம்’’ என்று கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top