தேசிய பத்திரிகையாளர் தினத்தில் பத்திரிகையாளர்களுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் பதிவில் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில்;
தேசிய பத்திரிகையாளர் தினமான இன்று, அரசுக்கும், பொதுமக்களுக்கும் இடையே பாலமாக விளங்கும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் தமிழக பாஜக
சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பொதுமக்கள் பிரச்சினைகளை அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று தீர்வு காண உதவுவதும், தவறுகள் நடப்பின் எடுத்துரைப்பதும், அதிகாரத்துக்கு அஞ்சாமல், வளைந்து கொடுக்காமல், நேர்மைத் திறம்படச் செயல்படுவதுமான ஊடகங்களின் கடமைகளை சிறப்புடன் தொடர வேண்டுகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.