பொள்ளாச்சி: போதையில் இளைஞரின் நெஞ்சைக் கடித்துக் குதறிய திமுக நிர்வாகி கைது!

கோவை, தெற்கு மாவட்ட திமுக சிறுபான்மை இணைச் செயலாளராக இருப்பவர் பைசல். இவரது மனைவி சகர்பானு அம்ராம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.

இதற்கிடையே அம்பராம்பாளையத்தை சேர்ந்த இளையராஜா என்பவர் தன்னுடைய ஆட்டோவை தனியாருக்கு சொந்தமான இடத்தில் நிறுத்தி விட்டுச் சென்றுள்ளார். அங்கு மதுபோதையில் வந்த பைசல்.

யாருடா பஞ்சாயத்துத் தலைவர் நான்.. என்ன கேட்காமல் எப்படி இங்கே வண்டியை நிறுத்தலாம் என்று ஆபாசமான வார்த்தைகளில் திட்டியுள்ளார். அத்துடன் ஆட்டோவில் இருந்த காற்றைப் பிடுங்கி விட்டு சென்றுள்ளார்.

இதனை தொடர்ந்து அங்கு வந்த இளையராஜா எதற்காக வண்டியில் இருந்த காற்றை பிடுங்கி விட்டீர்கள் எனக் கேட்டுள்ளார். அப்போது மதுபோதையில் இருந்த பைசல் அவரை தகாத வார்த்தைகள் திட்டி பலமாகத் தாக்கியது மட்டுமின்றி நெஞ்சு பகுதியில் நாய் கடித்துக் குதறுவதை போன்று குதறி வைத்துள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த இளையராஜாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக இளையராஜா ஆனைமலை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் கொலை மிரட்டல் விடுத்தல், பொது இடத்தில் வைத்துத் தாக்கி காயப்படுத்தியது, உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து பைசலை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

திமுகவின் கவுன்சிலர்களின் கண்வர்கள் இத்தனை நாட்கள் ஆட்டம் போட்டு வந்த நிலையில், தற்போது ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர்களும் கடிக்க ஆரம்பித்திருப்பது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top