சென்னை மாநகரில் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரத்தில் மழைநீர் வடிகால் பணிகளுக்காக ரூ.4000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டதாக விடியாத திமுக அரசு தம்பட்டம் அடித்துக்கொண்டது. ஆனால் ஒருநாள் பெய்த மழைக்கே சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மழைநீர் வெளியேறாமல் அப்படியே தேங்கி உள்ளது.
இந்த நிலையில், கனமழை பெய்து வரும் சென்னையில் மழைநீர் தேங்காத பகுதிகளில் சென்று மேயர் பிரியா மற்றும் திமுக அமைச்சர்கள் புகைப்படங்கள் எடுத்தும், தொலைக்காட்சிக்கு பேட்டியாகவும் அளித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியபடியே உள்ளதாகவும் எந்த நடவடிக்கையும் மேயர் மற்றும் இந்த விடியாத அரசு எடுப்பதில்லை என்று மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், மேயர் பிரியா பேசும் மொழியை வைத்து வெள்ளம், வெல்லம். இதனை பத்திரிகையாளர்கள் கவனிக்கவும் என அரசியல் விமர்சகர் சும்ந்த் ராமன் பதிவிட்டிருந்தார்.
இதற்கு திமுகவை சேர்ந்த சூர்யா என்பவர் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் பிராமணர்களை மிக கொச்சையாக வசை சொற்களால் பதிவிட்டுள்ளார்.
இதற்கு பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கடும் கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:
ஒரு நபரின் மீதுள்ள விமர்சனத்திற்கு ஒரு சமுதாயத்தையே தரம் தாழ்த்தி விமர்சிக்கும் இந்த நபரை கைது செய்ய உத்தரவிடுவாரா எல்லாருக்குமான முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் தமிழக போலீசார் நடவடிக்கை எடுக்குமா? என பதிவிட்டுள்ளார்.