கோவை மாநகராட்சியே ரூ.3,030 கோடி என்னாச்சு.. என்னாச்சு என்று தமிழக பாஜக சார்பில் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது. இது பொதுமக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.
கோவை மாநகராட்சியின் திமுக மேயராக இருப்பவர் கல்பனா. இவர் மீது பல்வேறு புகார்கள் கூறப்படுகிறது. மாநராட்சிக்கு எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. நிதி மட்டும் ஒதுக்கப்படுகிறது. ஆனால் பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கான எந்த ஒரு திட்டமும் நடைபெறுவதில்லை என சொல்லப்படுகிறது. அதிலும் மாநகராட்சிக்கு என்று ரூ.3030 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சுத்தமான குடிநீர் வழங்குவது, சாலை வசதி, சாக்கடை கால்வாய்கள் கட்டமைப்பு என பல்வேறு பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இதுவரையில் எந்த ஒரு திட்டமும் செயல்படுத்தவில்லை என பாஜக சார்பில் போஸ்டர் அச்சடித்து மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் கூறப்பட்டுள்ளதாவது:
கோவை மாநகராட்சியே என்னாச்சு.. என்னாச்சு.. ரூ.3030 கோடி என்னாச்சு?
தாங்கல தாங்கல கொசுக்கடி தாங்கல
ஊரெல்லாம் பள்ளம் ரோடெல்லாம் குப்பைமேடு
முடியல முடியல பேட்ச் ஒர்க் முடியல
பாதியாச்சு சிறுவாணி, டபுளாச்சி சொத்துவரி
நாறுது, நாறுது வீடெல்லாம் சாக்கடை நாறுது, என கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக பாஜக தொழில் பிரிவு துணைத்தலைவர் செல்வக்குமார் தனது எக்ஸ் வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:
கோவை மாநகராட்சியில் ₹3030 கோடி பட்ஜெட் இருந்தும் எந்தவொரு வார்டிலும் சரியான சாலை கிடையாது. குடிதண்ணீர் நேரத்துக்கு வருவது கிடையாது. தூய்மை பணியாளர்களுக்கு சரியான ஊதியம் கிடையாது. சாக்கடை பணிகள் முடியாமல் வீதியெங்கும் ஆளை விழுங்கும் பள்ளம், கொசு ஒழிப்பு பணிகள் நடப்பதில்லை இந்த லட்சணத்தில் மாநகராட்சியின் தோல்விகளில் இருந்து மக்களை திசைதிருப்ப ரூ.125 கோடியில் செம்மொழி பூங்கா அமைக்கிறது திறனற்ற திமுக அரசு. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.