முதல்வர் ஸ்டாலின் நியமித்த மீட்புக்குழுவில் இடம் பெற்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மூன்று நாட்களுக்கு பின்னர் வெள்ளத்தில் இருந்து மீட்க்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 16ம் தேதி முதல் கொட்டித்தீர்த்த கனமழையால் தென்மாவட்டங்களான திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் மிக கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. சாலைகள் துண்டிப்பால் மழை வெள்ளம் கிராமங்களை சூழ்ந்ததால் மக்கள் வெளியேற முடியாமல் அவதியுற்று வந்தனர். இது போன்ற மக்களை விமானப்படை, ராணுவம், கப்பல்படை, தேசிய பேரிடர் மீட்புபடை ஆகிய வீரர்கள் பத்திரமாக காப்பாற்றி வருகின்றனர். அதே போன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். சார்பில் உணவு, குடிநீர், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது.
ஆனால் திமுக அரசின் செயல்பாடுகள் மிகவும் மெத்தனமாகவே காணப்படுகிறது. பொதுமக்களுக்கு தேவையான எந்த ஒரு அடிப்படை உதவிகளையும் செய்யாமல் சேலம் திமுக இளைஞர் அணி மாநாட்டின் முன்னேற்பாடுகளை கவனிக்க ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் இயங்கிக் கொண்டிருகிறது. மழை பெய்து ஒரு நாளைக்கு பின்னரே பெயரளவில் உதயநிதி மற்றும் ஒரு சில அமைச்சர்கள் மழை வெள்ளம் பாதிப்பு இல்லாத இடத்திற்கு சென்று வழக்கமான முறையில் போட்டோ ஷூட் நடத்தினர்.
வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை மீட்பதில் தேசிய பேரிடர் மீட்புப்படை மற்றும் ராணுவம் மட்டுமே களத்தில் இறங்கி துரிதமான செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இவர்களுக்கு மாநில நிர்வாகம் தகுந்த ஒத்துழைப்பு வழங்குவதில்லையாம்!
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் வெள்ளத்தில் சிக்கி இருந்த திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை மூன்று நாளைக்கு பின் ஹெலிகாப்டரால் மீட்கப்பட்டுள்ளார். நான்கு பக்கமும் துண்டிக்கப்பட்ட ஏரலில் மாட்டிக் கொண்ட அனிதா ராதாகிருஷ்ணன் தகவல் தொடர்பு இல்லாமல் தத்தளித்து வந்துள்ளார். இது பற்றிய புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி பேசும் பொருளாக மாறியுள்ளது. ஒரு அமைச்சருடனே மூன்று நாட்கள் தொடர்பில்லை. ஆனால் அது பற்றி கூட திராவிட மாடல் அரசு கவலைப்படவில்லை என்றால் மக்களைப் பற்றி எப்படி கவலைப்படும்! ஒரு ஆளுங்கட்சியின் அமைச்சரை மீட்கவே இந்த அரசு மூன்று நாட்கள் எடுத்துக்கொள்கிறது என்றால், சாதாரண மக்களை மீட்க எத்தனை நாட்கள் எடுத்துக்கொள்ளும் என்ற கேள்வியையும் சமூக வலைத்தளங்களில் முன்வைக்கின்றனர். இது போன்ற மெத்தனப்போக்கான அரசை தமிழக மக்கள் முதன் முறையாக பார்க்கிறார்கள் என்று மட்டும் தெரிகிறது.