தமிழக முன்னாள் அமைச்சரும், ஐந்து முறை வெள்ளக்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான துரை ராமசாமி இன்று காலமானார். அவரது மறைவுக்கு பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்;
தமிழக முன்னாள் அமைச்சரும், ஐந்து முறை வெள்ளக்கோவில் சட்டமன்ற உறுப்பினர், 10 ஆண்டுகள் வெள்ளக்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் என மக்கள் பணிகளில் சிறந்து விளங்கியவருமான ஐயா துரை. ராமசாமி அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது ஆன்மா இறைவனடி சேர வேண்டிக் கொள்கிறேன்.
இந்தக் கடினமான நேரத்தில், அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ஐயா அவர்களது மகள் பா.ஜ.க., மாநிலப் பொதுக் குழு உறுப்பினர் சகோதரி உஷாதேவி அவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாளைய தினம் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஐயா துரை ராமசாமி அவர்களது இல்லத்திற்குச் சென்று அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தவுள்ளோம். இவ்வாறு மாநில தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.