மீண்டும் மோடி அரசுதான்.. இ.ண்.டி. கூட்டணி தேர்தலுக்கு முன்பே கலைந்திடும்: புதிய கருத்துக்கணிப்பில் தகவல்!

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி அதிகப்படியான தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் பிரதமராக மோடியே வருவார் என புதிய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.

2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. குஜராத் மாநில முதல்வராக இருந்த மோடி, பாரதத்தின் பிரதமாக பதவி ஏற்றார். தொடர்ந்து இரண்டு முறை பிரதமராக இருந்து வருகிறார்.

அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பாரதிய ஜனதா கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளராக மோடியே நிறுத்தப்பட இருக்கிறார். 2014-ல் கூட்டணியுடன் ஆட்சி அமைத்த பாஜக 2019 லும் தனிப் பெரும்பான்மை பெற்று இரண்டாம் முறையாக ஆட்சி அமைத்தது. 

இந்நிலையில் 2024-ல் கூடுதல் இடங்களை பிடித்து வெற்றிபெற வேண்டும் என பாஜக  தற்போது திட்டம் வகுத்து செயல் பட்டு வருகிறது. அதே நேரத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஊழல் செய்ய முடியவில்லையே என எதிர்க்கட்சிகள் தற்போது இ.ண்.டி. என்ற ஒரு புதிய ஊழல் கூட்டணியை உருவாக்கியுள்ளது. அதில் உள்ள கட்சிகள் அனைத்துமே ஊழல் செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர்கள்தான் பிரதமர் மோடியை எதிர்த்து வருகின்றனர். ஆனால் அவர்களிடம் இன்னும் ஒருமித்த கருத்து ஏற்படாமல் கூட்டணிக்குள் தனித்தனியே பிரச்சனை இருந்துதான் வருகிறது.

இதற்கிடையே வெளியாகும் அனைத்து நாடாளுமன்றத் தேர்தல் குறித்த கருத்து கணிப்புகளும் பாஜகவுக்கு சாதகமாக இருந்து வருகின்றன. தற்போது நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பாரதிய ஜனதாவிற்கு மேலும் பலம் சேர்ப்பதாக அமைந்தது.

இந்த நிலையில், ஏபிபி நியூஸ் மற்றும் சி-வோட்டர் இணைந்து நடத்திய கருத்து கணிப்பில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி 295 முதல் 335 இடங்களை பிடிக்க வாய்ப்புள்ளது என கூறியுள்ளது. அதேசமயம் இ.ண்.டி. கூட்டணி 165 முதல் 205 இடங்களை பிடிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 15-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை 18 வயதிற்கு மேற்பட்டோரிடம் மாநில அளவில் கருத்து கேட்கப்பட்டு இந்த கணிப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. கருத்துக் கணிப்பு நடத்தப்பட்ட அனைவரும் வாக்காளர்கள் எனவும், 543 இடங்களிலும் 13,115 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளது.

கிழக்கு மண்டலத்தில் உள்ள 153 இடங்களில் 80 முதல் 90 இடங்களை பாரதிய ஜனதாக கட்சி கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும், வடக்கு மண்டலத்தில் 180 இடங்களில் 150 முதல் 180 இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும், மேற்கு மண்டலத்தில் 78 இடங்களில் 45 முதல் 55 இடங்களை கைப்பற்றும் எனவும், தெற்கு மண்டலத்தில் 132 இடங்களில் 20 முதல் 30 இடங்களை கைப்பற்ற வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேசம் (27-29), சத்தீஸ்கர் (9-11), ராஜஸ்தான் (23-25), உத்தர பிரதேசம் (73-75) பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தும்.

காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் கர்நாடகாவில் கூட பாஜகவின் கை ஓங்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 23 முதல் 25 இடங்களையும், பா.ஜ.க. 16 முதல் 18 இடங்களையும் கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் பணிகள் திருப்பிகரமாக இருப்பதாக 47.2 பேர் ஆதரவு அளித்துள்ளனர். 30.2 சதவீதம் பேர் மிகவும் திருப்தி, 21.3 சதவீதம் பேர் திருப்தியில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், பெரும்பாலானோர் 2024 தேர்தல் வரையில் இ.ண்.டி. கூட்டணி ஒருங்கிணைந்து செல்ல வாய்ப்பே இல்லை. விரைவில் கலைந்துவிடும் எனவும் கூறியுள்ளனர்.

எப்போதும் ஊழல் கட்சிகளை மக்கள் விரட்டி அடிப்பார்கள். அதிலும் தமிழகத்தில் உள்ள திமுக அனைத்திலும் ஊழலில் சிக்கித் தவித்து வருகிறது. மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிப்பதில் மட்டுமே குறியாக உள்ளது. வரவுள்ள தேர்தல் ஊழலுக்கும், நேர்மைக்கும் உள்ள தேர்தலாக மாறப்போகிறது. இளைஞர்கள் அனைவருமே ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக பிரதமர் மோடியின் செல்வாக்கு இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top