கேலோ இந்தியா விளையாட்டு போட்டி அரங்கிற்குள் நுழைந்த முதல்வர் ஸ்டாலின் திடீரென கால் இடறி தடுமாறி கீழே விழப் பார்த்தார். அப்போது அவரை கைத்தாங்கலாக தாங்கி பிடித்தார் பிரதமர் நரேந்திர மோடி.
சென்னை நேரு விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் துவக்க விழா நேற்று (ஜனவரி 19) நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
துவக்க விழாவில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார். இருவரும் விழா அரங்கில் நுழைந்து போது திடீரென ஸ்டாலின் கால் இடறி நிலை தடுமாறி கீழே விழ பார்த்தார். உடன் வந்த பிரதமர் நரேந்திர மோடி கீழே விழாமல் ஸ்டாலினை கைத்தாங்கலாக தாங்கி பிடித்துக்கொண்டார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்டாலினை கீழே விழாமல் கைத்தாங்கலாக பிடித்த பிரதமர் நரேந்திர மோடியை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். மேலும் இது பற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி தடுமாறி கீழே விழ நேரிட்டதை திமுக இணைய உபிஸ்கள் கேலி செய்தனர். தற்போது முதல்வர் ஸ்டாலின் தடுமாறியதை திமுகவினர் கேலி செய்வார்களா எனவும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.