பாரத தேசத்தின் 75வது குடியரசுத் தினவிழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகர், படைவீட்டு அம்மன் கோவில் தேரடியில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தேசியக் கொடியேற்றி வணங்கி மரியாதை செலுத்தினார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:
இன்று காலை, நமது நாட்டின் 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு, கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகரம், படைவீட்டு அம்மன் கோவில் தேரடியில், தேசியக் கொடியேற்றி, வணங்கி, மரியாதை செலுத்தினோம்.
உடன், பா.ஜ.க. மாநிலத் துணைத் தலைவர் கே.எஸ்.நரேந்திரன், மாநிலச் செயலாளர் வினோஜ் பி செல்வம், கடலூர் கிழக்கு மாவட்டத் தலைவர் மணிகண்டன், மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.