மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குறித்த திமுக எம்.பி., டி.ஆர்.பாலுவின் கருத்திற்கு தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
டி.ஆர்.பாலு அரசியலுக்கு அவமானம், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைப் பற்றி அவர் இழிவான கருத்துக்களைக் கூறுவது இது முதல் முறையல்ல. மத்திய அமைச்சர் மீதான இந்தக் கருத்துகளை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தன்னலமற்ற முறையில் மக்கள் பணி ஆற்றி வரும் எல்.முருகனின் அர்ப்பணிப்பு நிச்சயமாக திமுக எம்பிக்களை எரிச்சலடைய செய்துள்ளது.
நமது பிரதமர் நரேந்திரமோடி, சமூக நீதியின் உண்மையான நாயகன் மற்றும் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை அமைச்சராக்கியுள்ளார், பல தசாப்தங்களாக மத்திய அரசில் இருந்தும் திமுகவால் ஒருபோதும் முடியாது.
டி.ஆர்.பாலு போன்ற திமிர்பிடித்தவரால் மட்டுமே, எஸ்.சி., சமூகத்தைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரையும், அமைச்சரையும் “தகுதியற்றவர்” என்று சொல்ல முடியும் எனத் தெரிவித்துள்ளார்.