மத்தியப் பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா தேர்தலுக்கு பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் இன்று (பிப்ரவரி 15) மாநில சட்டசபையில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
மத்திய அமைச்சர் எல்.முருகன், மாயா நரோலியா, பன்சிலால் குர்ஜார், உமேஷ் நாத் மகாராஜ் ஆகிய 4 பாஜக வேட்பாளர்களும் மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ், மாநில பாஜக தலைவர் வி.டி.சர்மா, முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் முன்னிலையில் மாநிலங்களவைத் தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்தனர்.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் சவுகான்;
“பாஜக ஒவ்வொரு பிரிவினருக்கும், அர்ப்பணிப்புள்ள கட்சியினருக்கும் வாய்ப்பு அளிக்கிறது. சில நேரங்களில் பாஜக எதிர்பார்க்காததைச் செய்கிறது. தகுதியான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கட்சித் தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். கட்சியின் மத்திய தலைமைக்கு நன்றி, கட்சியின் மாநில தலைமைக்கு வாழ்த்துகள்.”
மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 15 மாநிலங்களுக்கான ராஜ்யசபா தேர்தலை பிப்ரவரி 27-ம் தேதி நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இந்த தேதியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 27ம் தேதி அன்றே அறிவிக்கப்படும்.