பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலைவர் அண்ணாமலை இரங்கல்!

விருதுநகரில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த வெம்பக்கோட்டை அருகே, ராமுத்தேவன்பட்டியில் பட்டாசு ஆலை விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 5 அறைகள் தரைமட்டமாயின.

இது தொடர்பாக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைத்தளப்பதிவில்;

விருதுநகர் மாவட்டத்தில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 10 தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கின்றனர் என்ற செய்தி அறிந்து, மிகுந்த வேதனை அடைந்தேன்.

அவர்கள் குடும்பத்தினருக்கு, தமிழக பாஜக சார்பாக சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோர் அனைவரும், விரைவாக நலம் பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

அவர்களுக்கான உயர்தர சிகிச்சையை உறுதி செய்யுமாறும், அனைவருக்கும் உடனடியாக உரிய நிவாரணம் வழங்குமாறும் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top