நெருங்கும் தேர்தல் : திமுக எம்.பி.,யின்   ஆன்மிக  நாடகம் : நெட்டிசன்கள் கலாய்ப்பு !

தருமபுரி திமுக எம்.பி., பூமி பூஜை நடந்தபோது, இமாம் எங்கே? பாதிரியார் எங்கே? என பேசி வந்த நிலையில், கோவிலுக்கு சென்றதாக அவர் பதிவிட்ட புகைப்படத்தை கொண்டு, இது தேர்தல் நாடகம் என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகின்றனர்.

தருமபுரி திமுக எம்.பி., செந்தில்குமார், வெற்றி பெற்ற பின் நாடாளுமன்றத்தில் முதல் நாளில், ‘ஈ.வெ.ரா., வாழ்க’ என்ற கோஷத்துடன் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

தொடர்ந்து தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் நடந்த பூமி பூஜையில் கலந்து கொண்ட இவர், ‘பாதிரியார் எங்கே, இமாம் எங்கே, அவர்களையும் அழைத்து வாருங்கள்’ என அரசு அதிகாரிகளை வார்த்தைகளால் வசை பாடினார்.

மேலும், அதியமான்கோட்டையில் நடந்த பூமி பூஜையின் போது ,அங்கு வைத்திருந்த செங்கல்களை எட்டி உதைத்தார். இதற்கு, திமுக கட்சி நிர்வாகிகளே ,கடும் கண்டனம் தெரிவித்தனர். அதன் பின் பெரும்பாலான பூமி பூஜை நிகழ்வுக்கு செந்தில் குமார் அழைக்கப்படவில்லை.

இந்த நிலையில், கடந்த (22.02.2024) அன்று தருமபுரி மாவட்டம், பாலக்கோடு புதூர் பொன் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. அதில் பங்கேற்ற திமுக எம்.பி., செந்தில்குமார் ,கருவறைக்கு சென்றதாக அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.

அதை பலரும் பகிர்ந்து, ‘தேர்தல் நெருங்குவதால் திமுக- எம்.பி., ஆன்மிக நாடகம் போடுகிறார்’ என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

தேர்தலில் ஜெயிக்கும் வரை இந்துக்களின் வாக்குகளைப் பெற, பல்வேறு நாடகங்களை திமுகவினர் அரங்கேற்றுவார்கள். அதன் பின் ஜெயிச்ச பின்னர், ஈ.வே.ரா. கோஷம்போட்டுக்கொண்டு கோவில்களை இடிக்க உத்தரவிடுவார்கள். இனிமேலும் இந்துக்கள், திமுகவின் போலி ஆன்மிகத்தை நம்பமாட்டார்கள் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top