கர்நாடக காங்கிரசிடம் தமிழக உரிமையை விட்டுக்கொடுக்கும் திமுக: தலைவர் அண்ணாமலை கண்டனம்!

தமிழகத்திற்குச் சேர வேண்டிய தண்ணீரை வழங்க, கர்நாடக காங்கிரஸ் அரசை திமுக அரசு வலியுறுத்த வேண்டும் என தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு இருப்பதால் தமிழகத்திற்கு தற்போது காவிரி நீர் திறந்து விட முடியாது என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறியிருந்தார். இதற்கு தமிழக முதல்வராக உள்ள ஸ்டாலின் ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. மாற்றாக காங்கிரசுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில், தலைவர் அண்ணாமலை திமுக அரசுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

பெங்களூர் நகரத்தின் தண்ணீர்ப் பஞ்சத்திற்குக் காரணம், கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு சரியான திட்டமிடல் இன்றி இருந்தது தான். கர்நாடக மாநில பாஜக ஆட்சியில், இத்தனை ஆண்டுகளில் ஒரு முறை கூட, இது போன்ற தண்ணீர்ப் பஞ்சம் என்ற செய்தி வந்ததில்லை என்பதில் இருந்து, காங்கிரஸ் அரசின் திறனின்மை விளங்கும்.

இதனைக் காரணம் காட்டி, தமிழகத்துக்குச் சேர வேண்டிய  காவிரித் தண்ணீரை வழங்காமல் காங்கிரஸ் அரசு மறுப்பதை, தனது இன்டி கூட்டணி நலனுக்காக, திருடனுக்குத் தேள் கொட்டியதுபோல் அமைதியாக வேடிக்கை பார்க்கிறது திமுக.

இன்டி கூட்டணி நலனுக்காக, திமுக, தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுப்பதை சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்திற்குச் சேர வேண்டிய தண்ணீரை வழங்க, கர்நாடக காங்கிரஸ் அரசை திமுக அரசு வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top