கோவையில் பாஜகவின் செல்வாக்கு பல மடங்கு உயர்ந்திருப்பதை கண்டு, அதிர்ச்சி அடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தற்போது, கோவை தொகுதியில் போட்டியிடுவதில் இருந்து விலகி வேறு தொகுதியை திமுகவிடம் கேட்டு வாங்கியுள்ளது.
கோவை தொகுதியில் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணியில் இடம் பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நடராஜன் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். அதன் பின்னர் எங்கு சென்றார் என்றே தெரியவில்லை. தொகுதி மக்களின் எந்த ஒரு பிரச்சனைக்கும் முன்வரவில்லை. இன்று வரை அவர் மீது மக்கள் கடுமையான அதிருப்தியில் உள்ளனர்.
கோவை மாநகரின் பிரச்சனைக்கு பாஜக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. மத்திய அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் அங்கு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் கோவை மாவட்ட மக்களின் மனதில் பாஜக நீங்கா இடம் பிடித்துள்ளது. செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் பாஜகவிற்கு தங்களது ஆதரவினை தொடர்ந்து வழங்கி வருகின்றனர். இதனால் திமுக கூட்டணி அதிர்ச்சியில் உறைந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்க்கு மீண்டும் கோவை தொகுதி ஒதுக்குவதாக இருந்தது. ஆனால் கோவை தொகுதி வேண்டாம் வேறு தொகுதியை வழங்குங்கள் என்று திமுகவிடம், கம்யூனிஸ்ட் கேட்டு வாங்கியதாக தகவல்கள் பரவுகிறது.
பாஜகவிற்கு பயந்து , கோவையில் இருந்து பின்வாங்கி திண்டுக்கல் தொகுதியினை திமுக விடம் கேட்டு வாங்கியுள்ளது கம்யூனிஸ்ட். ஆனால் அங்கும் ஹிந்துக்களின் வாக்கு அதிகமாக உள்ளது. அங்கேயும் கம்யூனிஸ்ட் கட்சியை ஹிந்துக்கள் தோற்கடிப்பார்கள் என்பது மட்டும் உண்மை.