நோன்பு மேற்கொள்ளும் அனைத்து இஸ்லாமியச் சகோதர, சகோதரிகளுக்கும் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்;
நேர்வழியைத் தெளிவுபடுத்தி, உள்ளத் தூய்மையை வலியுறுத்தும் புனித ரமலான் மாதம், இன்று முதல் தொடங்கவிருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன்.
திருக்குர்ஆன் அருளப்பெற்ற புனிதமான ரமலான் மாதத்தில், நோன்பினை மேற்கொள்ளும் அனைத்து இஸ்லாமியச் சகோதர சகோதரிகளுக்கும், தமிழக பாஜக
சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.