கள்ளக்குறிச்சி மாவட்டம் உளூந்தூர்பேட்டையில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல வலியுறுத்தி, தமிழக பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன், 1000 பேரிடம் கையெழுத்து வாங்கிய மனுவை ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவிடம் வழங்கினார்.
அந்தக் கோரிக்கை மனுவினை சென்னைக்கு வந்திருந்த அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை சந்தித்து, அஸ்வத்தாமன் வழங்கினார். அந்த மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ரயில்வே அதிகாரிகளுக்கு மத்திய ரயில்வே அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர் உத்தரவிட்டதையடுத்து, சென்னை எழும்பூர் – கொல்லம் விரைவு ரயில் (16101/16102) உளுந்தூர்பேட்டையிலும், சென்னை எழும்பூர் – திருச்செந்தூர் விரைவு ரயில் (20605/20606) மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும். இதன் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
பா.ஜ.க., எப்போதுமே மக்களின் நலனுக்காக செயல்பட்டு வருவதை இதன் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.