தேர்தல் பத்திரங்கள் திட்டம் தொடர்பான புதிய தரவுகளை தேர்தல் ஆணையம் நேற்று (மார்ச் 17) வெளியிட்டது. தேர்தல் ஆணையம் இந்த விவரங்களை சீலிடப்பட்ட உறைகளில் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது, பின்னர் தரவை வெளியிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. புதிய விவரங்களின்படி, திமுக தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.656.5 கோடியைப் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இதில் பிரபல லாட்டரி நிறுவனரான சாண்டியாகோ மார்ட்டினின் பியூச்சர் கேமிங் நிறுவனம் ரூ.509 கோடி நிதியை வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
தேர்தல் பத்திரங்கள் வாயிலாக தி.மு.க.,வுக்கு, 656 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இதில், லாட்டரி மார்ட்டின் மட்டும், 509 கோடி ரூபாயை தாராளமாக வழங்கியுள்ளார். தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புதிய தகவல்களில், இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பத்திரங்கள் எந்த தேதியில், எந்த தொகைக்கு, யாரால் வாங்கப்பட்டன என்ற தகவல் வெளியிடப்பட்டது.
அதுபோல, கட்சிகளுக்கு கிடைத்த நன்கொடை தொடர்பான விபரங்களும் தனியாக வெளியிடப்பட்டன. ஒரு பத்திரம் யாரால் வாங்கப்பட்டது, அது எந்தக் கட்சிக்கு வழங்கப் பட்டது, தேர்தல் பத்திரங்களின் எண் உள்ளிட்ட தகவல்களை வெளியிடும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில், சீலிடப்பட்ட உறையில் இருந்த, எஸ்.பி.ஐ., ஏற்கனவே அளித்த தகவல்கள் மற்றும் டிஜிட்டல் தகவல்களை, உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகம், தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்தது.
அதனடிப்படையில் புதிய தகவல்களை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் நேற்று பதிவு செய்தது. இந்த தகவல்கள் கடந்த ஆண்டு நவம்பரில் அங்கீகாரம் பெற்ற, அங்கீகாரம் பெறாத 523 கட்சிகள் தாக்கல் செய்த அறிக்கைகளின் அடிப்படையில் அமைந்து உள்ளன.
தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்ட தகவலில் கூறப்பட்டு உள்ளதாவது:
மேற்கு வங்கத்தில் ஆளும் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரசுக்கு 1,397 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு 1,334 கோடி ரூபாயும், தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்ட்ர சமிதிக்கு 1,322 கோடி ரூபாயும் கிடைத்துள்ளது.
தேர்தல் பத்திரங்கள் வாயிலாக அதிக நன்கொடை பெற்ற கட்சிகள் பட்டியலில், தமிழகத்தில் ஆளும் தி.மு.க., ஆறாவது இடத்தில் உள்ளது. அந்த கட்சிக்கு, 656.6 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்.,குக்கு 442.8 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
தேர்தல் பத்திரங்கள் வாயிலாக அரசியல் கட்சிகளுக்கு அதிகளவில் நன்கொடை வழங்கியவர்களின் பட்டியலில், லாட்டரி மார்ட்டினின் பியூச்சர் கேமிங் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. 509 கோடி ரூபாயை தி.மு.க.,வுக்கு நன்கொடையாக அளித்துள்ளது.
தி.மு.க.,வுக்கு நன்கொடை அளித்தோர் பட்டியலில், 105 கோடி ரூபாயுடன் மேகா இன்ஜினியரிங், 14 கோடி ரூபாயுடன் இண்டியா சிமென்ட் ஆகியவையும் உள்ளன. இந்த புதிய பட்டியலின்படி, அ.தி.மு.க.,வுக்கு 6.05 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
லாட்டரி சீட்டு, சூதாட்டம் நடத்தும் ‘பியூச்சர் கேமிங்ஸ்’ நிறுவனத்திடம் 509 கோடி ரூபாயை திமுக தேர்தல் பத்திரம் வழியே பெற்றுள்ளது அம்பலமாகியுள்ளது. நிர்வாக திறனற்ற திமுக ஆட்சியில் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து பெயரளவில் மட்டும் நடவடிக்கைகள் எடுப்பது போல் காட்டிவிட்டு வலுவில்லாத சட்டத்தை இயற்றி, மறுபுறம் மக்களின் உயிரையே பணயம் வைக்கும் சூதாட்ட நிறுவனத்திடம் பணம் பெற்றிருப்பது வெட்கக்கேடானது. எனவே வருகின்ற தேர்தலில் திமுகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்பது மட்டும் உண்மை.