நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் பா.ம.க. போட்டியிடும் 10 தொகுதிகளில், 9 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று (மார்ச் 22) வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் வருகிற 19-ம் தேதி அன்று நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியல் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒப்புதலுடன் அறிவிக்கப்படுகிறது. காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.
9 தொகுதிகளின் வேட்பாளர்கள் விவரம்:
1. திண்டுக்கல் – கவிஞர் ம.திலகபாமா, பி.காம் மாநிலப் பொருளாளர், பா.ம.க.
2. அரக்கோணம் – வழக்கறிஞர் கே.பாலு, பி.காம்., பி.எல் செய்தித் தொடர்பாளர், பா.ம.க. தலைவர், வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை
3 ஆரணி – முனைவர் அ.கணேஷ் குமார், பி.இ., பி.எச்டி., முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர், மாவட்டச் செயலாளர், பா.ம.க. திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம்,
4. கடலூர் – தங்கர் பச்சான், டி.எப்.டெக், எழுத்தாளர், திரைப்பட இயக்குனர்,
5. மயிலாடுதுறை – ம.க.ஸ்டாலின், பி.எஸ்சி., மாவட்டச் செயலாளர், பா.ம.க. தஞ்சாவூர் வடக்கு மாவட்டம்
6. கள்ளக்குறிச்சி – இரா. தேவதாஸ் உடையார், பி.ஏ.,பி.எல்., நாடாளுமன்ற மக்களவை முன்னாள் உறுப்பினர், மாநிலத் துணைத் தலைவர், பா.ம.க.
7. தர்மபுரி – அரசாங்கம், பி.காம்., மாவட்டச் செயலாளர், பா.ம.க. தர்மபுரி கிழக்கு மாவட்டம்
8. சேலம் – ந. அண்ணாதுரை, பி.ஏ.,பி.எல்., முன்னாள் மாவட்டச் செயலாளர், பா.ம.க. சேலம் தெற்கு மாவட்டம்
9. விழுப்புரம் – முரளி சங்கர், பி.காம்., மாநில செயலாளர், பா.ம.க. மாணவர் அணி
9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் , மீதமுள்ள ஒரு தொகுதிக்கான வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என அக்கட்சி தெரிவித்துள்ளது.