தமிழகத்தில், மத்திய உள்துறை அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான அமித்ஷா இரண்டு நாட்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பாஜக தலைவர் மற்றும் தேசிய கூட்டணி கட்சித் தலைவர்கள் மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பாஜக மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழகத்தில் இரண்டு நாட்கள் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். ஏப்ரல் 4 ல் மதுரை மற்றும் சிவகங்கையிலும், 5ம் தேதி சென்னையிலும் அமித்ஷா பிரசாரம் செய்ய உள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகையால் பாஜக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உற்சாகமடைந்துள்ளனர்.