பாஜக நிறுவன தினத்தை முன்னிட்டு தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்த 1980ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி தோற்றுவிக்கப்பட்ட பாஜக தற்போது உலகின் மிகப்பெரிய கட்சியாக உள்ளது. 1951ஆம் ஆண்டு டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியால் உருவாக்கப்பட்ட பாரதிய ஜன சங்கத்தில் இருந்து பாஜக உதயமானது.
பாஜக நிறுவன தினத்தை முன்னிட்டு தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து தொண்டர்களுக்கும் நிறுவன தின வாழ்த்துகள். தங்கள் தியாகம், அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் அமைப்பை நாடு தழுவிய அளவில் விரிவுபடுத்திய மூத்த தலைவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரதமர் மோடியின் தலைமையில் இன்று பாஜக உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக மாறியுள்ளது.
பிரதமர் தலைமையில், அனைத்து பாஜக தொண்டர்களும், வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டியெழுப்பும் உறுதியுடன், வரவிருக்கும் பொதுத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றி பாதையில் முன்னேறி வருகின்றனர்.
அயோத்தி ராமர் கோவில், 370 வது சட்டப்பிரிவு நீக்கம் உள்ளிட்ட பாஜக அரசின் சாதனைகளையும் அவர் விவரித்தார்.