திமுகவின் ஊழல் ஆட்சி காரணமாக கேள்விக்குறியான தமிழக வளர்ச்சி : அரியலூரில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா!

திமுகவின் ஊழல் ஆட்சி காரணமாக தமிழகத்தின் வளர்ச்சி கேள்விக்குறியாக உள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அரியலூரில் தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்திற்கு (ஏப்ரல் 6ம் தேதி) இரவு பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா திருச்சி வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து சிதம்பரம் மக்களவைத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாக அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் நேற்று (ஏப்ரல் 7) அவர் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஜே.பி.நட்டா;

சனாதன தர்மம் மற்றும் தமிழ் கலாச்சாரத்தை ஒழிக்க திமுகவும் காங்கிரஸும் செய்த முயற்சிகள், இவற்றின் நம்பிக்கைகள் மீதான திட்டமிட்ட தாக்குதலுடன், தமிழகத்தில் மத நல்லிணக்கத்தை கடுமையாக சீர்குலைத்துள்ளது.

இது தமிழக மக்களுக்கு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் செங்கோலை நிறுவி தமிழ் கலாச்சாரத்தை பாதுகாத்து புத்துயிர் கொடுத்திருப்பது நமது பாஜக அரசு ஆகும்.

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமையின் கீழ், தமிழகத்தின் வளர்ச்சியால் மட்டுமே இந்தியாவின் வளர்ச்சி சாத்தியப்படும் என்று நாங்கள் நம்புகிறோம், மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை உறுதியுடன் ஆதரிக்க தமிழகம் முடிவு செய்துள்ளது என்பதை பொதுமக்களின் உற்சாகம் உறுதி செய்கிறது. வரும் தேர்தலை “வளச்சியடைந்த பாரதம்” என்ற பிரச்சாரத்தோடு எதிர்கொள்வோம்! எனத் தெரிவித்தார்.

மேலும், திமுவின் ஊழல் ஆட்சி காரணமாக தமிழகத்தின் வளர்ச்சி கேள்விக்குறியாக உள்ளது என்றார். இ.ண்.டி. கூட்டணியை கடுமையாக சாடிய அவர், பாதி தலைவர்கள் ஜெயிலிலும், எஞ்சியவர்கள் பெயிலிலும் உள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த கார்த்தி சிதம்பரம், ப.சிதம்பரம், ராகுல் காந்தி, சோனியா ஆகியோர் பெயிலில் உள்ளனர்.

மேலும் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் சிறையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தமிழர்களின் பண்பாடு, சனாதனத்தை பாஜக காத்து வருகிறது. ஆனால் திமுக, காங்கிரஸ் அவற்றை ஒழிக்க முயற்சி செய்து வருகிறது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பாரதம் பொருளாதாரத்தில் உச்சம் பெறும்.

இவ்வாறு ஜே.பி.நட்டா கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top