விருதுநகர் மக்கள் பாஜக மீது வைத்துள்ள அன்பை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்: ஜே.பி.நட்டா!

தமிழகத்தின் விருதுநகர் மாவட்ட மக்கள், பாஜக மீது வைத்துள்ள அன்பை (ஏப்ரல் 07) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கண்டு மகிழ்ச்சி அடைவதாக, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.
விருதுநகர் மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாரை ஆதரித்து தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தாமரை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது விருதுநகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

தமிழகத்தின் விருதுநகர் மக்கள் பாஜக மீது கொண்டுள்ள அன்பை இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

கடந்த 10 ஆண்டுகளில், பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமையின் கீழ், ’சப்கா சாத் சப்கா விகாஸ் சப்கா விஸ்வாஸ் சப்கா பிரயாஸ்’ – ‘அனைவரோடும் இணைந்து, அனைவருக்குமான, அனைவரின் நம்பிக்கையை பெற்று, அனைவருக்குமான வளர்ச்சி’ என்ற உணர்வோடு அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்ய பாஜக அரசு பல திட்டங்களை செய்து வருகிறது. இருப்பினும், திமுகவின் ஊழல் மற்றும் மோசமான ஆட்சி தமிழகத்தை எதிர்மறையாக பாதிக்கிறது; இந்த ஊழல் மற்றும் குடும்ப அரசுக்கு எதிராக மக்கள் ஒன்றுபட்டு நிற்க முடிவு செய்துள்ளனர்.

400 இடங்களைக் கடக்க வேண்டும் என்ற மோடி அவர்களின் இலக்கை நிறைவேற்றுவதில் மக்கள் உறுதியாக உள்ளனர் என்பது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அளித்த ஆதரவு மூலம்  ஒரு சிறப்பான செய்தியாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top